பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தணும் - விஸ்வ ஹிந்து பரிசத்
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டுமென விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் தென்மாநில செயலாளர் கேசவராஜு கோரிக்கை விடுத்துள்ளார்.
Update: 2024-03-05 14:07 GMT
திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வருகை தந்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தென்னிந்திய அமைப்பாளர் கேசவராஜூ பழனி வந்தார். செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், அயோத்தி பாலராமர் கோவில் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு, நாடுமுழுவதும் உள்ள ஐந்தரை லட்சம் கிராமங்களில் உள்ள 17 கோடி குடும்பங்களுக்கு அட்சதை பிரசாதம் வழங்கப்பட்டது என்றும், நம் நாட்டில் சிவபெருமான், முருகப்பெருமான என எந்த கடவுள்களை வழிபட்டாலும் அது இந்து கலாச்சாரமே என்றும், நம் நாட்டில் இந்துக்களின் எண்ணிக்கை பெரும்பான்மையாக இருக்கும் வரையிலேயே நமது வழிபாடும், கலாச்சாரமும், ஒற்றுமையும் இருக்கும் என்றும், அதேவேளையில் இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து குலதெய்வத்தை கூட வழிபட முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.