தமிழ்நாடுஅரசு ஆரம்ப சுகாதார நிலைய அனைத்து ஊழியர் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம்
Update: 2023-12-23 10:35 GMT
தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய அனைத்து ஊழியர் சங்கம் சார்பில் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் டிசம்பர் -22ம் தேதி பெரம்பலூர் அரியலூர் மாவட்டத்திற்கான பொதுக்குழு கூட்டம் பெரம்பலூர் மாவட்ட தலைவர் இந்திரா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வரவேற்பு உரையாற்றிய நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட தலைவர் மங்கையர்கரசி வாழ்த்துரை வழங்கினார். மாநில அமைப்பு செயலாளர் அருள் சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் சுகாதார பணியாளர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் அரசாணை 604-வழங்கிய தமிழக முதல்வருக்கும் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருக்கும் சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் குழும இயக்குனர், மாநில நோயாளி நல வாழ்வு சங்கத்தினர்க்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி வாழ்நாள் தலைவராக அங்கீகாரம் . அறிவித்து அவருடைய செயலை பாராட்டி கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. தொகுப்பூதியத்தில், பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். கொரோனா நிவாரணமும் தொற்றுநோய் படி 1,500 வழங்க வேண்டும். தொகுப்பூதிய தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய அனைத்து ஊழியர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட செயலாளர் சித்ரா நன்றி தெரிவித்தார்.