வேப்பநதட்டை அரசு கல்லூரியில் பொது கலந்தாய்வு
வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நாளை துவங்குகிறது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பநதட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பொறுப்பு) முதல்வர் சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேப்பந்தட்டை அரசு கலை மற் றும் அறிவியல் கல்லூரியில் 2024-25-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை அதாவது பி.ஏ தமிழ், ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ., பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் விண்ணப்பித்தவர்களுக்கு முதற்கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 10-ந் தேதி (திங் கட்கிழமை) காலை 9.30 மணி அளவில் கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது.
நேரில் வரும்போது மாணவர்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் 3 நகல்கள் எடுத்து வரவேண்டும். அதாவது 10, 11, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்,மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம் மற்றும் 10 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பெற்றோர் அல்லது பாதுகாவலர் உடன் நேரில் வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.