கள்ளக்குறிச்சி: பொது விநியோக திட்ட முகாம்

கள்ளகுறிச்சியில் நடைபெற்ற பொது விநியோக திட்டத்தின் கீழ் சிறப்பு குறைகேட்பு முகாமில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

Update: 2024-01-22 05:35 GMT

,பொதுவிநியோக திட்டம்

கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் சிறப்பு குறைகேட்பு முகாம் நடந்தது.குடிமைப்பொருள் தனி தாசில்தார் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல்,ஞ திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் இணைத்தல், புதிய அட்டை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 34 மனுக்கள் பெறப்பட்டன.

அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது. இளநிலை வருவாய் ஆய்வாளர் தினேஷ், உதவி யாளர் பெரியதமிழன் உட் பட பலர் பங்கேற்றனர். சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் குடிமைப்பொருள் தனி தாசில்தார் கமலம் தலைமையில் சிறப்பு முகாம் நடந்தது. பெறப்பட்ட 20 மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது.

Tags:    

Similar News