காளையை மலர்களால் அலங்கரித்து கிரிவீதி வலம்

பழநி அருகே பாதயாத்திரையாக வந்தவர்கள் மேல்கரைப்பட்டி குமரப்ப சுவாமி கோயில் காளையை மலர்களால் அலங்கரித்து கிரிவீதி வலம் வந்தனர்.

Update: 2024-04-18 11:13 GMT

கிரிவீதி வலம்

பழநியில் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைந்த போதிலும் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடிகள் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பழநி அருகே மேல்கரைப் பட்டியைச் சேர்ந்தவர்கள் இன்று தீர்த்தக்காவடி எடுத்து வந்தனர். பாதயாத்திரையாக வந்தவர்கள் மேல்கரைப்பட்டி குமரப்ப சுவாமி கோயில் காளையை மலர்களால் அலங்கரித்து கிரிவீதி வலம் வந்தனர்.
Tags:    

Similar News