பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்

பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கிவைப்பு;

Update: 2024-01-24 13:01 GMT
விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்

ஆண்டுதோறும் ஜனவரி 24ம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்திய சமூகத்தில் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. விருதுநகரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் வேர்ல்டு விஷன் இந்தியா அமைப்பு சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் துவங்கப்பட்டது.வாகனத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி,குழந்தைகளை குழும உறுப்பினர் ராஜகோபால் மற்றும் முனியம்மாள் இளைஞர் நீதி குழுமம் உறுப்பினர் சதீஷ்குமார் வேர்ல்டு விஷன் இந்தியா திட்ட மேலாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News