வேலூர் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

வேலூர் அருகே திருமணம் ஆன இரண்டு வருடத்தில் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-14 09:31 GMT

காவல் நிலையம்

வேலூரை அடுத்த கீழ்மொணவூர் அம்பேத்கர்நகரை சேர்ந்தவர் சஞ்சய் (25), பெயிண்டர். இவரும் மேல்மொணவூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை மகள் புவனேஸ்வரியும் (21) சில மாதங்களாக காதலித்தனர்.

இதனை அறிந்த புவனேஸ்வரியின் குடும்பத்தினர் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு சஞ்சய் குடும்பத்தினர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது.நேற்று காலை சஞ்சய் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் புவனேஸ்வரி, குழந்தையுடன் இருந்தார். 11 மணியளவில் வீட்டிற்கு சஞ்சயின் தாயார் சென்றார்.

வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. குழந்தை கதறி அழுது கொண்டிருந்தது. இதையடுத்து அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு அறையில் புவனேஸ்வரி இரும்பு கொக்கியில் சேலையில் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார்.

அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆட்டோவில் வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

புவனேஸ்வரியின் தாயார் சரிதா விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News