தந்தை திட்டியதால் மகள் தற்கொலை
கள்ளகுறிச்சி மாவட்டம்,கல்லிப்பாறையில் தந்தை திட்டியதால் மனமுடைந்த மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Update: 2024-04-05 04:25 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியலுார் அடுத்த கல்லிப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி பானுப்பிரியா,20; இருவருக்கும் கடந்த ஜன., மாதம் 21ம் தேதி திருமணம் நடந்தது. ஆனால், குடும்ப பிரச்னை காரணமாக பானுப்பிரியா கணவனை பிரிந்து, தந்தை ஆண்டி வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2ம் தேதி தந்தை ஆண்டி கணவனை பிரிந்து வாழ்வது குறித்து மகள் பானுப்பிரியாவை திட்டினார்.
இதனால் மனமுடைந்த பானுப்பிரியா எலி பேஸ்ட் சாப்பிட்டார். உடன் அவரது குடும்பத்தினர் பானுப்பிரியாவை மீட்டு தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பானுப்பிரியா உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கரியலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.