மின்சாரம் தாக்கி சிறுமி பலி

தென்காசி மாவட்டம், வடக்குஅச்சம்பட்டி விளையாடி கொண்டிருந்த சிறுமி மீது மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-03-09 04:43 GMT
தற்கொலை 

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குஅச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அகஸ்டின் ஸ்டீபன் என்ற அருள் என்பவரது 11 வயது சிறுமி ரஞ்சிதா அருகே உள்ள வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அங்கு துணி காய வைக்கும் கம்பிக்கு மேல் உள்ள மின்சார வயரில் மின் கசிவு ஏற்பட்டு கம்பியில் மின்சாரம் பாய்ந்து இருந்த நிலையில் இருந்த கம்பியை சிறுமி ரஞ்சிதா தொடவே மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார்.

சிறுமியை உடனடியாக அங்குள்ளவர்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ரஞ்சிதா உயிரிழந்தார் என மருத்துவர் தெரிவித்தனர். இந்த நிலையில் உடல் பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து தேவர்குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News