வீட்டிலிருந்து வெளியே சென்று சிறுமி மாயம்
திருச்சி மாவட்டம், மணக்கால் பகுதியில் சிறுமி மாயமான குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-03-25 11:25 GMT
சிறுமி மாயம்
திருச்சி மாவட்டம், லால்குடி மணக்கால் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதான சிறுமி. இவர் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 23 ம் தேதி மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்று உள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சடைந்த சிறுமியின் பாட்டி இது குறித்து லால்குடி காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாயமான சிறுமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.