மணப்பாறை அருகே மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய பெண்

மணப்பாறை அருகே மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய பெண். இறப்பில் சந்தேகம் என புகார் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்தில் தடய அறிவியல் துறை ஆய்வு.

Update: 2024-02-10 10:23 GMT
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சின்னதங்கம். இவரது கணவர் மோகன் மூர்த்தி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் தனது 7 வயது மகள் மற்றும் மாமியார், மனநிலை சரியில்லாத கொளுந்தனாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சின்னத்தங்கம் வீட்டருகே உள்ள மாட்டுக்கொட்டகையில் மாடு கட்டும் கயிற்றில் தூக்கிட்டு சடலமாக தொங்கியதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து தகவல் அறிந்த புத்தாநத்தம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்ப நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் சின்னத்தங்கம் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் உள்ள தடயங்கள் குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து புத்தாநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனை இழந்த இந்த பெண் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News