பெண் குழந்தைகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளியில் 9மற்றும் 10ம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த மாணவிகள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-08 07:22 GMT

பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 9மற்றும் 10ம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோரின் உச்சகட்ட ஆண்டு வருமானம் ரூ.2.5லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும். தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.4000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 9மற்றும் 10ம் வகுப்புகளில் பயிலும் மாணவிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சல் வங்கிகளில் தமது பெயரில் வங்கிக்கணக்கு துவங்கி அதனை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஆதார் எண் மற்றும் வங்கி விபரங்களை தமது வருமானச்சான்று மற்றும் சாதிச்சான்று நகல்களுடன் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடம் சமர்ப்பித்தல் வேண்டும். தலைமையாசிரியர்கள் விபரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News