கோ-கோ போட்டி கொங்கு கல்வி நிலையம் மாநில அளவில் சாதனை !
கோ-கோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெண்கலப்பதக்கம் சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கோப்பையை வழங்கி மாணவர்களை பாராட்டினார்;
By : King 24x7 Angel
Update: 2024-03-12 12:28 GMT
கொங்கு கல்வி நிலையம் மாநில அளவில் சாதனை
14 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் மாநில அளவிலான குடியரசு தின விழா கோ-கோ போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்றது. அதில் 38 மாவட்ட அணிகள் பங்கு பெற்றன. அதில் ஈரோடு மாவட்டம் சார்பாக ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மாணவர்கள் கலந்துகொண்டு வெண்கலப்பதக்கம் வென்று ஈரோடு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெண்கலப்பதக்கம் சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கோப்பையை வழங்கி மாணவர்களை பாராட்டினார். சாதனை படைத்த மாணவர்களையும் உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் மற்றும் செயலாளர் கே. செல்வராஜ், நிர்வாகிகள், பள்ளியின் முதல்வர் டி.நதியாஅரவிந்தன் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.