கொங்கணாபுரம் வாரச்சந்தையில் பொங்கல் பண்டிகைக்காக ஆடுகளின் விலை உயர்வு

கொங்கணாபுரம் வாரச்சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிக விலையி ஆடுகள் விற்பனை

Update: 2024-01-13 09:04 GMT
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் வாரச்சந்தையானது சனிக்கிழமை நாட்களில் நடைபெறுவது வழக்கம், இந்த சந்தையில் பல்வேறு மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்க வாங்கவும் அதிக அளவில் வருவது வழக்கம்.அதேபோல இந்த வாரமும்‌ நடைபெற்ற வாரச்சந்தையில் பொங்கல் பண்டிகை எதிரொலியாக ஆடுகளின் விலை அதிகரித்து வழக்கத்தை விட ஆடுகள் வரத்து அதிகமாக காணப்பட்டது செம்மறியாடு, வெள்ளாடு, உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடுகள்  5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது.... மேலும் பொங்கல் பண்டிகையின் எதிரொலியால்  நடைபெற்ற வார சந்தையில் ஆடுகளின் விலை உயர்வு ஒருபுறம் இருந்தாலும் காணு மாட்டுப் பொங்கலுக்கு இன்னும் நான்கு நாட்கள் இருப்பதால் விற்பனை சற்று குறைவாகவே நடைபெற்றதாகவும் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
Tags:    

Similar News