சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம் !!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, அய்யலூர் சந்தையில் ஆடுகள் விற்பனை நேற்று அமோகமாக நடைபெற்றது.

Update: 2024-06-01 05:51 GMT

ஆடுகள் விற்பனை

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் வியாழன்தோறும் ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் ஆடு, கோழிகளை வாங்க வருகின்றனர். வரும் ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக முஸ்லீம்கள் குர்பானி கொடுப்பது வழக்கம். இதற்காக ஆடுகள் வாங்க பல்வேறு பகுதிகளிலிருந்து நேற்று ஏராளமானோர் குவிந்தனர். இதனால் நீண்ட நாட்களுக்கு பின்னர் அய்யலூர் ஆட்டுச்சந்தை களைகட்டியது. செம்மறி ஆடுகள் வாங்க அதிகளவில் ஆர்வம் காட்டியதால் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை விற்பனையானது. 10 கிலோ கொண்ட வெள்ளாடு ரூ.6500 முதல் ரூ.7,000 வரை விற்பனையானது. நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.420 வரை விற்பனையானது. சுமார் ரூ.1 கோடி வரை விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News