கொடைக்கானலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
கொடைக்கானலில் தமிழ்நாடு முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் வழிபாடு தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தார்.
Update: 2024-05-03 07:25 GMT
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் வருகை புரிந்து பாம்பார் புரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார், இதனை தொடர்ந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று முன் தினம் பூம்பாறை மலைக்கிராமத்தில் உள்ள 3000 ஆண்டு பழமை வாய்ந்த குழந்தை வேலப்பர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்த நிலையில் இன்று காலை வேளையில் கொடைக்கானல் நகரில் உள்ள புகழ்பெற்ற மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களாக இருக்க கூடிய குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவில் சாமி தரிசனம் செய்து அதன் பின்பு புனித சலேத் அன்னை திருத்தலத்திலும் பிரார்த்தனை மேற்கொண்டு கோவில் மற்றும் தேவாலயத்தின் சிறப்பம்சங்களை பற்றி நிர்வாகிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார், மேலும் கோவிலுக்கும் , தேவாலயத்திற்கும் வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினை பார்த்ததும் ஆர்வத்துடன் அவருக்கு வணக்கம் சொல்லி அருகில் சென்று பேசியதுடன் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.