தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி : மே 3-இல் தொடக்கம்

தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சோ்ந்து பயன்பெற திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-26 04:10 GMT

பைல் படம் 

மத்திய அரசின் பனை பொருள்கள் நிறுவனம், காதிகிராமத் தொழில் வாரிய தலைமை பயிற்சியாளா் கே. சுவாமிநாதன் கூறியது: மத்திய அரசின் காதி கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் பல்வேறு திறன்மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக திருச்சியில் தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய அரசின் பனை பொருள்கள் நிறுவனம், காதி கிராமத் தொழில் வாரியம் ஆகியவை இணைந்து இந்தப் பயிற்சி வகுப்புகளை திருச்சி மேலரண்சாலையில் உள்ள மத்வ சித்தாந்த சபை வளாகத்தில் நடத்தவுள்ளன.

மே 3-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இந்த பயிற்சியில் 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் சேரலாம். குறைந்தது 8ஆம் வகுப்பு படித்திருத்தல் அவசியமானது. செய்முறை பயிற்சியின் இறுதியில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சி வகுப்பில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால்மாா்க் தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி முடித்தவா்கள் தேசிய, கூட்டுறவு, தனியாா் வங்கிகள் மற்றும் நகை அடகு நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளா் பணிக்கு சேரலாம். சொந்தமாக நகை கடை, நகை அடகு நடத்தவும் தகுதி பெறுவா். மிகப்பெரிய நகை வியாபார நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். பயிற்சிக் கட்டணம் மற்றும் இதர விவரங்களுக்கு 94437-28438 என்ற தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

Tags:    

Similar News