புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை
குமாரபாளையத்தில் புனித வெள்ளியையொட்டி சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது.
Update: 2024-03-30 03:26 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சிலுவைப்பாதை நடந்தது. புனித வெள்ளி என்பது கிறிஸ்தவர்களால் மனப்பூர்வமாக இயேசு மகானை எண்ணி, வழிபடும் நாளாகும். இந்த நாளில் தேவாலயம் சென்று சிறப்பு வழிபாடுகள் செய்வது வழக்கம். குமாரபாளையம் நடராஜா நகர் புனித ஜெபமாலை ஆலயத்திலிருந்து புனித வெள்ளியையொட்டி சிலுவை பாதை வலம் நடந்தது. இதில் ஏசுபிரான் போல் வேடமிட்ட நபரை, சிலுவை சுமக்க வைத்து, சவுக்கால் அடித்து, முள் கிரீடம் சூடி, சித்ரவதை செய்துகொண்டு வந்தனர். கிறிஸ்தவ மக்கள் பெரும்பாலோர் ஊர்வலமாக வந்ததுடன், ஏசுபிரான் புகழ் பாடும் பாடல்கள் பாடியபடி வந்தனர். முக்கிய வீதிகளின் வழியாக வந்த இந்த ஊர்வலம் மீண்டும் தேவாலயத்தில் நிறைவு பெற்றது. அங்கு பங்கு தந்தை பாவேந்திரன் மற்றும் பங்கு பேரவை குழுவினர் தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.