கோவிலூர் சவேரியார் தேவாலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடுகள்

நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் தேவாலயத்தில் இன்று புனித வெள்ளி முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது

Update: 2024-03-29 10:33 GMT
புனிதவெள்ளி விழா

உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இன்று புனித வெள்ளியை அனுசரித்து வருகின்றனர் இந்த தினத்தில் தான் இயேசு அவர்கள் சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்தார் என்பதால் கத்தோலிக்க கிறிஸ்துவர்களுக்கு மிக முக்கியமான நாளாக புனித வெள்ளி கருதப்படுகிறது.

இந்த நிலையில் இன்று தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட புனித சவேரியார் தேவாலயத்தில் காலை 8 மணிக்கு பங்குத்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் புனித வெள்ளி சிலுவை பாதை வழிபாடுகள் துவங்கியது. சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இந்த நிகழ்வில் பங்கு பெற்றனர். மேலும் இன்று மாலை 6 மணி வரை நற்கருணை ஆராதனை மற்றும் ஆறு முப்பது மணிக்கு திருச்சிலுவை ஆராதனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News