அரசு பள்ளிக்கு ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கும் விழா
கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் வேடநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள இரும்பிலான மேஜை.பெஞ்சுகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்;
Update: 2023-11-16 05:26 GMT
பள்ளிக்கு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த வேடநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள இரும்பிலான மேஜை,பெஞ்சுகளை பள்ளி கட்டிடக்குழு தலைவர் என். ராஜவேலு அவரது மனைவி உண்ணாமலை நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சார்பாக வழங்கும் நிகழ்ச்சி வேடநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் எம்.குப்புசாமி தலைமையில் நடந்தது. மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை கலைச்செல்வி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பள்ளி தலைமையாசிரியையிடம் மேஜை, பெஞ்சுகளை வழங்கியும், மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி கல்வியின் முக்கியத்துவம், அவசியம் குறித்து அறிவுரை வழங்கி பேசினார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் என்.பாண்டுரங்கன்.பொருளாளர் எஸ். அன்பழகன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் அறிவழகி ஞானமுருகன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள். பெற்றோர்கள். பொதுமக்கள் கலந்து கொண்டனர்.