டூவீலர் மீது அரசு பேருந்து மோதி விபத்து - முதியவர் படுகாயம்
கரூர் மாவட்டம், புலியூர், அமராவதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரசப்பன் (79). இவர் நவம்பர் 11-ம் தேதி காலை 11 மணியளவில் புலியூர்- உப்பிடமங்கலம் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். புலியூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, எதிர் திசையில், கரூர் மாவட்டம்,கடவூர் தாலுகா,ஜமீன் வெள்ளப்பட்டி அருகே உள்ள சின்ன தேவன் பட்டி பகுதியைச் சேர்ந்த முருகதாஸ்(38) என்பவர் ஓட்டி வந்த அரசு பேருந்து, அரசப்பன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அரசப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம்குறித்து அரசப்பனின் மகன் அருண்குமார் அளித்த புகாரின் பேரில்,அரசு பேருந்து ஓட்டுனர் முருகதாஸ் மீதுவழக்கு பதிவு செய்து பசுபதிபாளையம் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.