திருப்பூரில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா கடத்தியவர் கைது

திருப்பூரில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை கடத்திய ஐயப்பன் என்பவரை தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-02-24 11:47 GMT

திருப்பூரில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா கடத்தியவர் கைது 

திருப்பூரில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விசாகப்பட்டினத்தில் இருந்து கடத்தி வந்து மன்னார்குடிக்கு எடுத்துச் செல்லும் என்ற நபர் கைது. திருப்பூர் பின்னலாடைக்கு பிரசித்தி பெற்ற நகரமாகும்.இங்கு பல்வேறு மாநிலத்தவர்களும் வட மாநிலத்தவர்கள் என சுமார் பத்து லட்சத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான கஞ்சா பொருட்களை விற்பவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த வாலிபரை அழைத்து விசாரணை மேற்கொண்டதில் வாலிபரின் பெயர் ஐயப்பன் என்பதும் இவர் மன்னார்குடியை சேர்ந்தவர் என்பதும் மேலும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை எடுத்துக்கொண்டு கோவை வந்ததாகவும் அங்கிருந்து திருப்பூருக்கு பேருந்து மூலம் வந்ததாகவும் திருப்பூரில் இருந்து மன்னார்குடிக்கு எடுத்துச் சென்று விற்பனையில் ஈடுபட இருந்ததாகவும் தெரிவித்ததை தொடர்ந்து திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் நேற்றைய தினம் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News