மதுரையில் அரசு ஒப்பந்ததாரர் தற்கொலை
மதுரையில் அரசு ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-31 10:56 GMT
தற்கொலை
அவனியாபுரம் சந்தோஷ் நகரை சேர்ந்தவர் அமானுல்லா (வயது 51). இவர் தென்காசி மாவட்டம் மேலகரத்தில் அரசு காலை உணவு திட்ட ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் ஒரு வங்கியில் கிரெடிட் கார்டு வாங்கியதாகவும், அதன் மூலம் பல்வேறு இடங்களில் கடன் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கடனை அவரால் திருப்பி அடைக்க முடியவில்லையாம். இதனால் மன வருத்தத்தில் இருந்தாராம். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.