தஞ்சாவூரில் அரசு ஊழியர் சங்க கொடியேற்று விழா

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அமைப்பு தினம், தொழிற்பயிற்சி அலுவலர் சங்க அங்கீகார தின கொடியேற்று விழா நடைபெற்றது.;

Update: 2024-05-09 14:43 GMT
கொடியேற்று விழா

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாணிக்கம் ஆண்டு (ரூபி ஜூப்ளி) நிறைவு, 41 ஆவது அமைப்பு தினத்தை  முன்னிட்டும், தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் அங்கீகார தினத்தை முன்னிட்டும் கொடியேற்று விழா நடைபெற்றது. 

தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க மாநில அமைப்பு செயலாளர் அஜய்ராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் கொடியை கிளைத் தலைவர் செந்தில்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கொடியை, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தஞ்சை வடக்கு வட்டத்தின் தலைவர் எம்.சுப்பிரமணியன்,

Advertisement

அகில இந்திய மாநில அரசு ஊழியர்  சம்மேளனத்தின் கொடியை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர்  சா.கோண்டபாணி ஆகியோர் ஏற்றி வைத்தனர்.  நகராட்சி அனைத்துத் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் மூர்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வடக்கு வட்டத் தலைவர்  எம்.சுப்பிரமணியன்  வாழ்த்திப் பேசினர். 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் சா.கோதண்டபாணி   சிறப்புரையாற்றினார். நிறைவாக ஆர்.ரவி நன்றி கூறினார். 50 க்கும் மேற்பட்ட முன்னணி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News