குமரி : பாதிரியார் இல்லத்தில் அரசு ஊழியர் படுகொலை

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் அரசு மெக்கானிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-21 07:33 GMT
கொலை செய்யப்பட்ட சேவியர்

குமரி மாவட்டம், திங்கள்நகர் அருகே உள்ள மைலோடு பகுதியைச் சேர்ந்தவர் ராயப்பன் மகன் சேவியர்குமார் (45). அரசு பஸ் டிப்போவில் மெக்கானிக்காக உள்ளார். நாம் தமிழர் கட்சியில் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்து வந்தார். இவரது மனைவி ஜெமினி (40). இவர் மைலோடு கிறிஸ்தவ ஆலயத்திற்கு உட்பட்ட பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். அதே ஆலயத்தில் பாதிரியாராக ராபின்சன் என்பவர் இருந்து வருகிறார்.

ஆலயம் மற்றும் பள்ளி கணக்குகள் சம்மந்தமாக சேவியர்குமாருக்கும் சர்ச் நிர்வாகத்துக்கும் பிரச்சனை இருப்தாகவும், இதனால் பள்ளியில் இருந்து ஜெமினி சஸ்பெண்ட் செய்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் நேற்று மதியம் சேவியர்குமாரை அதே சர்ச் அன்பிய தலைவர் வின்சென்ட் என்பவர் பாதிரியார் இல்லத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இதனிடையே ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியார் இல்லத்தில் சேவியர்குமார் இறந்து கிடப்பதாக ஜெமினிக்கு தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்ததும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் அங்கு குவிந்தனர் இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த குளச்சல் சப் டிவிஷன் ஏஎஸ்பி பிரவீன்கௌதம், தலைமையில் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார். இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சேவியர்குமார் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீசார் ஏற்பாடு செய்தனர்.

ஆனால், தலைமறைவான பாதிரியார் உள்ளிட்ட கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு இன்று அதிகாலை 2 மணியளவில் சேவியர் குமார் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லுரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News