விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு: ஐகோர்ட் கிளை உத்தரவு
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு என ஐகோர்ட் கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.
Update: 2024-03-03 12:44 GMT
வறட்சியால் பாதிக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம் உள்ளவர்களுக்கு மட்டும் வறட்சி நிவாரணம் வழங்கப்படுகிறது. இதை ரத்து செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி, 2017-ல், தென்மண்டல தரிசு நில விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் முருகேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபூர்வாலா, நீதிபதி ஜி.இளங்கோவன் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் பி.திலக்குமார் ஆஜராகி, “சிறு விவசாயிகளின் நலன் கருதி அரசு எடுத்த முடிவு கொள்கை ரீதியானது” என்றார். அப்போது நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். முதலில் சிறு, குறு விவசாயிகளுக்கு பலன் கிடைக்க வேண்டும். கடன் தள்ளுபடி உள்ளிட்ட வழிகளில் நிவாரணம் வழங்க வேண்டும். சிறு, குறு விவசாயிகள் நிலம் வைத்திருக்க முடியாது. இதுகுறித்து, பட்ஜெட்டில் அரசு நிதி ஒதுக்க வேண்டும். அரசின் கருத்தை நீதிமன்றத்தின் மூலம் பார்க்க முடியாது. மானியம் வழங்குவதும் அரசின் கொள்கை முடிவாகும்.இதில் அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.இது 2017-ல் தாக்கல் செய்யப்பட்ட மனு என்பதால் மூடப்பட்டது.