மேலூரில் திருமண விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என் ரவி

மேலூரில் தமிழக ஆளுநரின் உதவியாளர் மகன் திருமணத்தில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்திய தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி.

Update: 2024-06-17 09:23 GMT

தாலி எடுத்து கொடுக்கும் ஆளுநர்

மதுரை மாவட்டம் மேலூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஆளுநரின் உதவியாளர் ரவீந்திரன் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநர் திருமாங்கல்யத்தை எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி சென்றார். 

  தமிழ்நாடு ஆளுநரின் உதவியாளராக இருப்பவர் ரவீந்திரன். சென்னை சேர்ந்த இவரது மகன் சுதர்ஷனுக்கும் மேலூரை சேர்ந்த முருகன் என்பரது மகள் ஜனனிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் இன்று மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு ஆளுநர், ஆர்.என் ரவி திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களை பூக்களை தூவி வாழ்த்தினார். முன்னதாக திருமண நிகழ்வுக்கு வந்த தமிழக ஆளுநர் ரவிக்கு மணவீட்டார் சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 15 நிமிடங்கள் திருமண மண்டபத்தில் இருந்து மணமக்களை வாழ்த்திய பின்னர் தமிழ்நாடு ஆளுநர் குடும்ப புகைப்படம் எடுத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.

ஆளுநரின் மேலூர் வருகையால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டு இருந்தது.மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags:    

Similar News