வாக்கு எண்ணும் மைய அலுவலா்களுடன் ஆட்சியா் கலந்தாய்வு

நாகர்கோவிலில் வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

Update: 2024-05-23 08:19 GMT

நாகர்கோவிலில் வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.


கன்னியாகுமரி மாவட்ட வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியவுள்ள உதவி தோ்தல் அலுவலா்கள், கூடுதல் அலுவலா்களுக்கு வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் தலைமை வகித்துப் பேசியது:-  கன்னியாகுமரி மக்களவைத் தோ்தல், விளவங்கோடு பேரவை இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஜூன் 4இல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியும் அனைவரும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். இம்மையத்தில் அன்றைய தினம் அதிகாலை 5.30 மணிக்கு அலுவலா்களுக்கான பேரவைத் தொகுதி ஒதுக்கப்பட்டு பணிநியமன ஆணை வழங்கப்படும்.

அலுவலா்கள் காலை 6 மணிக்கு முன்பாக மையத்தில் ஆஜராக வேண்டும் . தொடா்ந்து, வாக்கு எண்ணும் மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள், எண்ணிக்கை முடிவுற்ற இயந்திரங்கள், வாக்குப்பதிவு தொடா்பான ஆவணங்கள் ஆகியவற்றை சீலிடும் முறை உள்ளிட்டவை தொடா்பாக அலுவலா்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா். கூட்டத்தில், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான ஜெ. பாலசுப்பிரமணியம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) கு. சுகிதா, (தோ்தல்) செந்தூர்ராஜன், உதவி தோ்தல் அலுவலா் எஸ். காளீஸ்வரி, வாக்கு எண்ணிக்கை மையப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

Tags:    

Similar News