2 நாளில் 272 மனுக்கள் அளிப்பு
சங்ககிரி வட்ட ஜமாபந்தியில் 2வது நாளாக பொதுமக்கள் 272 மனுக்கள் அளித்தனர்
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், மேற்கு உள்வட்டத்திற்குள்பட்ட பத்து கிராமங்களின் பசலி 1433க்கான ஜமாபந்தி கணக்குகள் தணிக்கை செய்யும் பணிகள் சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
சங்ககிரி வருவாய் மேற்கு உள்வடத்திற்குள்பட்ட கத்தேரி, ஆலத்தூர் வீராச்சிபாளையம், வீராச்சிபாளையம் அக்ரஹாரம், வீராச்சிபாளையம் அமானி, சின்னாகவுண்டனூர், சங்ககிரி, சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம், மோரூர் பிட் 1, மோரூர் பிட்2, கஸ்தூரிப்பட்டி உள்ளிட்ட பத்து கிராமங்களின் பசலி 1433ம் ஆண்டுக்கான கணக்குகளை ஜமாபந்தி அலுவலர் ந.லோகநாயகி தணிக்கை செய்தார். இதில் பத்து கிராமங்களுக்குள்பட்ட பொதுமக்கள் இலவச வீட்டுமனைபட்டா, பட்டா மாறுதல், வாரிசு சான்று, முதியோர் ஓய்வூதிய தொகை, சர்வே எண் உட்பிரிவு செய்தல், புலவரைபடத்தில் திருத்தம் செய்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், குடும்ப அட்டை, பிற துறை சார்ந்த கோரிக்கைகள் உள்ளிட்ட 272 மனுக்களை அளித்தனர்.
அவர் நடவடிக்கைகளுக்காக அந்தந்த துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைத்தார். இதில் சங்ககிரி வட்டாட்சியர் அறிவுடைநம்பி, சமூக பாதுகாப்பு நலத்துறை தனி வட்டாட்சியர் ஜெயக்குமார், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், தலைமையிடத்து துணை வட்டாசியர் தமிழ்செல்வி, மண்டல துணை வட்டாட்சியர் ஷாஜிதா பேகம், தேர்தல் துணை வட்டாட்சியர் மகேந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் அமுதா, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். ஜூன்.20ம் தேதி வியாழக்கிழமை தேவண்ணகவுண்டனூர், மஞ்சக்கல்பட்டி, ஒலக்கசின்னானூர்,வெட்டுக்காடுபட்டி, ஆவரங்கம்பாளையம், ஐவேலி, அன்னதானப்பட்டி, வளையசெட்டிபாளையம், சுங்குடிவரதம்பட்டி, கோட்டவருதம்பட்டி, வடுகப்பட்டி, வேப்பம்பட்டி, இருகாலூர்புதுப்பாளையம், ஊத்துப்பாளையம், சுங்குடிவருதம்பட்டி, பூச்சம்பட்டி, இருகாலூர், செல்லப்பம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கான தணிக்கை ஆய்வுகள் நடைபெற உள்ளது. இதில் இந்த கிராமங்களுக்குள்பட்ட பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என வருவாய்த்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.