செய்யாறில் புதிய பாலம் - அதிகாரிகள் ஆய்வு
செய்யாற்றின் குறுக்கே ரூ.9. 21 கோடி மதிப்பீட்டில் புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-09 02:21 GMT
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குருவிமலை - காளூர் சாலையில் செய்யாற்றின் குறுக்கே ரூ. 9. 21 கோடி மதிப்பீட்டில் புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது . இப்பணியை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ,அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் தீரஜ் குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர் .