கரூரில் மது போதையில் சாக்கடையில் விழுந்து உயிரிழந்த அரசு அதிகாரி

கரூரில் மது போதையில் சாக்கடையில் விழுந்து அரசு அதிகாரி உயிரிழந்தார்.;

Update: 2024-02-08 15:57 GMT

காவல் நிலையம் 

கரூரில் மது போதையில் சாக்கடையில் விழுந்து உயிரிழந்த அரசு அதிகாரி. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள, ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி வந்தவர் கரூர் தெற்கு தெரு கிட்ஸ் ஸ்கூல் அருகே வசித்து வந்த ராஜசேகர் வயது 35. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

அண்மை காலமாக மது போதைக்கு அடிமையாக இருந்தார். இந்நிலையில், பிப்ரவரி 7ஆம் தேதி காலை 8 மணி அளவில், கரூர் லட்சுமி ராம் தியேட்டர் பகுதியில், சாக்கடை அருகே மது போதையில், தனது டூவீலர் உடன் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக கால் இடறி சாக்கடையில் விழுந்து, சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

Advertisement

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் ராஜசேகரின் தாயார் சகுந்தலா வயது 69 என்பவருக்கு, அளித்த தகவலின் பெயரில், சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை பார்த்து கண் கலங்கிய அவர், இது தொடர்பாக கரூர் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர்,

உயிரிழந்த ராஜசேகரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர் காவல்துறையினர்.

Tags:    

Similar News