கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்க்க அரசு நிதி உதவி

அரசு நிதி உதவி பெற மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-21 15:52 GMT

ஆட்சியர் சங்கீதா

 தமிழ்நாட்டில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-2017-ஆம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்படி திட்டத்தின் கீழ் பின்வருமாறு கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது.

கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணிகள் விவரம்: 1. சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட் (ம) ஒலிப்பெருக்கி. 2. நற்கருணை பேழை பீடம். 3. திருப்பலிக்கு தேவையான கதிர் பாத்திரங்கள், சுரூபங்கள், மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்கள் (ம) பக்தர்கள் அமர்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்ற ஆலயங்களுக்கு தேவையான உபகரணங்கள். 4. தேவாலயத்திற்கு சுற்றுச்சுவர் வசதி அமைத்தல்.

தேவாலய கட்டிடத்தின் வயதிற்கேற்ப உயர்த்தப்பட்டுள்ள மானிய தொகை விவரம்: வ. எண். தேவாலய கட்டிடத்தின் வயது தற்போது வழங்கப்பட்டு வரும் மானியம் உயர்த்தி வழங்கப்படும் மானியம் 1. 10 முதல் 15 வருடம் வரை 2 இலட்சம் 10 இலட்சம் 2. 15 முதல் 20 வருடம் வரை 4 இலட்சம் 15 இலட்சம் 3. 20 வருடத்திற்கு மேல் இருப்பின் 6 இலட்சம் 20 இலட்சம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான குழு மூலம் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து, நிதியுதவி கோரி விண்ணப்பிக்கும் கிறித்துவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக மாவட்ட ஆட்சித் தலைவரின் ஒப்புதலுடன் தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். மதுரை மாவட்டத்திலுள்ள கிறித்துவ தேவாலயங்களில் பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தினை பயன்படுத்திடுமாறு அனைத்து கிறித்துவ அமைப்பை சார்ந்த தேவாலய பாதிரியார்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்.சங்கீதா தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News