பட்டதாரி பெண் மர்மமான முறையில் தற்கொலை

அருமனை அருகே பட்டதாரி இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-22 07:44 GMT

தற்கொலை

அருமனை செறுகொல்லை, ஆயவினை பகுதியை சேர்ந்த ஜீவாரெட் மகள் ஜினிஷா.பட்டதாரி. பாட்டியுடன் வசித்து வந்தார். இவரது பாட்டி நேற்று மதியம் முந்திரி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று விட்டு மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு பூட்டப் பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைத்த பாட்டி உறவினர் உதவியுடன் கதவை திறந்து ஜினிஷா உள்ளே சென்றார். அப்போது அறையில் தூக்கில் தொங் கிய நிலையில் ஜினிஷா இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த அருமனை போலீசார் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர்.விசாரணையில், வேர்க்கிளம்பி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை ஜினிஷா காதலித்து வந் துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News