தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் 2022-2023ம் கல்வி ஆண்டிற்கான பட்டமளிப்புவிழா இன்று கல்லூரிக் கலையரங்கில் வைத்து நடைபெற்றது.

Update: 2024-04-27 12:29 GMT

பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் 2022-2023ம் கல்வி ஆண்டிற்கான பட்டமளிப்புவிழா இன்று கல்லூரிக் கலையரங்கில் வைத்து நடைபெற்றது. விழாவிற்குக் கல்லூரி முதல்வர் சொ. வீரபாகு வரவேற்புரை வழங்கினார். வேலூர் வி.ஐ.டி. பலகலைக்கழகம், நிறுவனர் மற்றும் வேந்தர் கோ. விசுவநாதன், பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தி மாணவ மாணவியர்களுக்குப் பட்டம் வழங்கினார்.

அரசு உதவி பெறும் பாடப்பிரிவில் 551 மாணவ மாணவியர்களும், அரசு உதவி பெறாத பாடப்பிரிவில் 234 மாணவ மாணவியர்களும் மொத்தம் 785 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 709 மாணவ மாணவியர்கள் நேரில் பட்டம் பெற்றனர்.

விழாவில், பல்கலைக்கழக அளவில் 2 மாணவர்கள் தங்கப்பதக்கமும், 23 மாணவ மாணவியர்கள் பல்கலைக்கழக தரவரிசையும் பெற்றனர். பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு வெள்ளி பதக்கங்கள் கல்லூரி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலர், வ.உ.சி. கல்லூரிக் கல்விக் கழக உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விழா நிகழ்ச்சியினைக் கல்லூரி நிர்வாகம், முதல்வர், பேராசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் இணைந்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News