நந்தா என்ஜினீயரிங், தொழில்நுட்ப கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா

நந்தா என்ஜினீயரிங், தொழில்நுட்ப கல்லூரிகளில் 888 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வழங்கினார்

Update: 2024-03-11 14:53 GMT

நந்தா என்ஜினீயரிங், தொழில்நுட்ப கல்லூரிகளில் 888 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வழங்கினார்


.ஈரோடு நந்தா என்ஜினீயரிங் கல்லூரியின் 18-வது பட்டமளிப்பு மற்றும் நந்தா தொழில்நுட்ப கல்லூரியின் 12-வது பட்டமளிப்பு விழா என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன் தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.நந்தகுமார் பிரதீப், எஸ்.திருமூர்த்தி, விழாவில் சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

அப்போது பேசிய அவர் . இன்றைய இளைஞர்களின் கவனம் தகவல் தொழில்நுட்ப துறைக்கு செல்ல வேண்டும் என்றே உள்ளது. காரணம், அந்த துறையில் நுழைந்தவுடன் அதிக சம்பளம் கிடைக்கிறது. பல துறைகளில் திறமை வாய்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. அதில் முதல்கட்டமாக சம்பளம் குறைவாக கிடைத்தாலும், நன்கு அனுபவம் பெற்ற பிறகு நீங்கள் தான் சம்பளத்தை நிர்ணயிக்கும் நிலை ஏற்படும்.

தலைமை பண்புகளை இளைஞர்கள் வளர்த்துக்கொள்வது அவசியம். அதற்காக யோகா, தியானம் போன்றவற்றை செய்யலாம். அதுமட்டுமின்றி, போதை பொருட்கள், சூதாட்டம், செல்போன் பயன்பாட்டுக்கு இளைஞர்கள் அடிமையாகி விடக்கூடாது. இதில் அடிமை ஆகுபவரால் சமூகத்துக்கும், குடும்பத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்

Tags:    

Similar News