குமரி ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர்
உள்ளாட்சிகள் தினமான இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் காலை 11.00 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில்; அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படவுள்ளது. அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்கவும், பொது மக்களுக்குத் தேவையான விவரங்களை அளித்திடவும் அனைத்துத் துறைகளின் அலுவலர்களும்; இக்கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். எனவே, பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் கேட்டுக்கொண்டார்.