பாட்டியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த பேரன் !
பொள்ளாச்சியை அருகே பாட்டியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர்.;
பொள்ளாச்சியை அருகே பாட்டியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சியை அடுத்துள்ள சந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகாத்தாள் (50).இவரின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில் மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் மூதாட்டியின் உறவினர்கள் சிலர் அடிக்கடி இவரை வந்து பார்த்து செல்வது வழக்கம்.வழக்கம் போல மூதாட்டியை உறவினர்கள் பார்க்க வந்துள்ளனர். ஆனால் சிறிது நேரத்தில் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது தலையில் காயங்களுடன் மூதாட்டி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவரது உறவினரான வேட்டைக்காரன் புதூர் பகுதி சேர்ந்த மணிகண்டன் (25) மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. மணிகண்டனை போலீசார் விசாரணை செய்ததில் தனது உறவினரான பாட்டியிடம் நில பட்டாவை கேட்டதற்கு அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்து அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் அடித்து கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து மூதாட்டியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நில பட்டாவிற்காக பாட்டியை தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..