சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகளின் குறைதீர்வு கூட்டம்

சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகளின் குறை தீர்வு கூட்டம் .

Update: 2023-10-31 14:13 GMT

குறைதீர்வு கூட்டம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வேலூர் மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகளின் குறை தீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் குமரவேல் பாண்டியன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், தனித்துணை ஆட்சியர் மற்றும் இதர துறை அலுவலர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மனுக்களை அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் , நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News