திருச்செங்கோட்டில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தலைமையில் நடந்தது

Update: 2023-10-21 05:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாட்டில் முதன் முறையாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மாவட்ட அளவில் மட்டுமே நடந்து வந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் எம்.எல்.ஏ ஈஸ்வரனின் முயற்சியால் கோட்ட அளவில் நடந்தப்பட்டது.கூட்டத்திற்கு சரியான ஏற்பாடுகள் இல்லாததால் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் நின்று கொண்டே கூட்டத்தை கவனிக்க வேண்டி இருந்தது.பெரும்பான்மையான அதிகாரிகள் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். கூட்டத்தில் வருவாய் துறை சர்வேயர் கார்த்திகேயன் மீது விவசாயிகள் சரமாரி குற்றச்சாட்டு எழுப்பி அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். மேலும் வருவாய் துறையில் லஞ்சம் கொடுத்தால் தான் காரியம் நடப்பதாக குற்றச்சாட்டினர். கூட்டத்தில் பள்ளிபாளையம் சாயப்பட்டறை கழிவு நிலத்தடி நீரை மாசுபடுத்துவது குறித்தும் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளிடம் சட்டமன்ற உறுப்ப்பினர் ஈஸ்வரன்கேள்வி எழுப்பினார். இந்த கூட்டத்தில் ஆர் டி ஓ சுகந்தி,அட்மா தலைவர் வட்டூர் தங்கவேல்,தாசில்தார் விஜயகாந்த் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News