சேலம் அருகே மளிகை கடையில் திருட்டு

சேலம் இரும்பாலை அருகே மளிகை கடையின் ஷட்டரை உடைத்து பணம் மற்றும் பொருட்களைத் திருடி சென்ற மர்ம நபர்களைப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.;

Update: 2024-01-17 03:11 GMT

திருட்டு 

சேலம் இரும்பாலை பக்கமுள்ள எஸ்.கொல்லப்பட்டி வீரகன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்து (27). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் கடையை மூடி விட்டு சென்றார். மறுநாள் கடைக்கு வந்தபோது ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே இருந்த 2 ஆயிரம் மற்றும் பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் இரும்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News