கரூர் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு: 20,787 பேர் எழுதினர்
கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமை பணிகள் தேர்வு (குரூப் 4)-ல் 20,787 நபர்கள் தேர்வு எழுதினர்.
கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமை பணிகள் தேர்வு (குரூப் 4)-ல் 20,787 நபர்கள் தேர்வு எழுதினர். மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு. கரூர் அரசு கலைக் கல்லூரி, தாந்தோணி அரசு மேல்நிலைப்பள்ளி, வள்ளுவர் கல்லூரி, என் எஸ் என் கல்லூரி பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு (குரூப் 4) மையங்களை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த தேர்வானது இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி மாவட்டத்தில் 99 மையங்களில் நடைபெற்று வருகிறது. தேர்வு எழுத உதவி தேவைப்படக்கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய ஏற்பாடு செய்திடவும், மேற்கண்ட தேர்வவர்களுக்கு, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் கூடுதலாக 20 நிமிடங்கள் ஒதுக்கிடவும், முதன்மை கண்காணிப்பு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இத்தேர்வு 89 இடங்களில் 99 மையங்களில் நடைபெற்று வருகிறது. தேர்வு எழுத 26 ஆயிரத்து 869 நபர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தேர்வில் 58 மாற்றுத்திறனாளிகள் உதவியாளர்களை கொண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க 7- கண்காணிப்பு குழுக்கள், 16 பறக்கும் படைகள், 99 ஆய்வு அலுவலர்கள், 99 தலைமை கண்காணிப்பாளர்கள்,தேர்வு மையங்களில் வீடியோ பதிவு செய்ய 14 வீடியோ கிராபர்கள், பாதுகாப்பு பணியில் 131 காவலர்கள் பணியமற்றப்பட்டுள்ளனர். அந்த வகையில் இன்றைய தினம் 20,787 நபர்கள் தேர்வு எழுதினர். 682 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.