காவலர் பயிற்சி நிறைவு விழா

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு காவலர் பயிற்சி பள்ளியில், பெண் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடந்தது.

Update: 2024-01-06 04:25 GMT

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரில் காவலர் பயிற்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பெண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் 370 புதிதாக தேர்வு செய்யப்பட்ட பெண் காவலர்களுக்கு சட்ட பயிற்சி. கவாத்து பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் கடந்த 7மாதமாக வழங்கப்பட்டது. அதன் பயிற்சி நிறைவு விழா நேற்று காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

அதற்கு பயிற்சி பள்ளி துணை முதல்வர் மணவாளன் தலைமை வைத்தார். முதன்மை சட்ட போதகர் சுகுணா முதன்மை கவாத்து போதகர் பிரான்சிஸ் மேரி ஆகியோர் முன்னிலை வைத்தார். திருச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் காமினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பயிற்சி பெற்ற சிறந்த பயிற்சி காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். தொடர்ந்து பயிற்சி காவலர்களின் கலை நிகழ்ச்சிகளாக பரத நாட்டியம், சிலம்பம், வாள், வேல் சுழற்றுதல் ஆகிய நடைபெற்றது. மேலும் பயிற்சி முடித்த காவலர்கள் சாகசங்கள் செய்து அசத்தினர். குறிப்பாக கண்களை கட்டி கொண்டு துப்பாக்கிகளில் பாகங்களை கழட்டி பிரித்து விட்டு மீண்டும் ஒன்று சேர்த்தனர். அதே போல் இந்திய பாகிஸ்தான் எல்லையான வாகாவில் நடைபெறும் கவாத்து (பரேட்) போல் இரு அணிகளாக பிரிந்து செய்து காட்டி தங்களது திறன்களை வெளிப்படுத்தி அசத்தினர். இந்நிகழ்வில் திருச்சி சிட்டி போலீஸ் கமிஷ்னர் பேசியதாவது, பயிற்சி முடித்த காவலர்கள் நல்ல முறையில் பயிற்சியை மேற்கொண்டு உள்ளது பாராட்டத்துக்கு உரியது. ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல துறையிலும் சாதனை புரிந்துள்ளார்கள். பயிற்சி முடித்து பணிக்கு செல்லும் காவலர்கள் நேர்மையாகவும் நல்ல ஒழுக்கத்துடனும் பணிபுரிந்து அரசின் சலுகைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் பணியில அர்ப்பணிப்புடன் நேர்மையுடன் இருந்தால் உங்களுக்கு அனைத்து அனைத்து விருதுகளும், அனைத்து ஊதியங்களும், சிறப்பு ஊதியங்களும் சரியாக வந்துசேரும். தமிழக காவல்துறையில் பணிபுரிய காத்திருக்கும் காவலர்களே நீங்கள் நேர்மையையும் ஒழுக்கத்தையும் இரு கண்களாக கொண்டு எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை விட்டு விடாமலும் இழந்து விடாமலும் தைரியமாக எந்த சூழ்நிலையும் அணுக வேண்டும். அதே நேரத்தில் பொதுமக்களிடம் பணிவுடன் அன்புடனும் பழக வேண்டும். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சம்பளத்தை இழந்து விடக்கூடாது என்றார்.

Tags:    

Similar News