ரவுடி வீச்சு தினேஷ் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி வீச்சு தினேஷ் உள்பட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-05-22 08:49 GMT

கைது செய்யப்பட்டவர்கள் 

வேலூரை அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியில் சத்துவாச்சாரி போலீசார் கடந்த மார்ச் 26-ந் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அதில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. காரில் இருந்த 3 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், அவர்கள் வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த ரவுடி தினேஷ் என்கிற வீச்சு தினேஷ் (37), அஜித் (22) மற்றும் லத்தேரியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (24) என்றும், காரில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவறை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து 3 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். வீச்சு தினேஷ் உள்பட 3 பேர் மீதும் காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன், கலெக்டர் சுப்புலெட்சுமிக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான ஆணையின் நகலை சேலம் மத்திய சிறை அலுவலரிடம் சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் ராஜா ஒப்படைத்தார்.

Tags:    

Similar News