சிவகாசியில் குரு பெயர்ச்சி விழா

சிவகாசியில் நடந்த குரு பெயர்ச்சி விழாவில் முன்னாள் அமைச்சர் கே.டி இராஜேந்திரபாலாஜி பங்கேற்றார்.

Update: 2024-05-02 12:45 GMT

சிவகாசியில் நடந்த குரு பெயர்ச்சி விழாவில் முன்னாள் அமைச்சர் கே.டி இராஜேந்திரபாலாஜி பங்கேற்றார்.


சிவகாசி சிவன் கோவிலில், குரு பெயர்ச்சி விழா..முன்னாள் அமைச்சர் சுவாமி தரிசனம்..... விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில், குரு பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக, ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி -ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.அதனை தொடர்ந்து,நவகிரக சந்நதியில் உள்ள குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து,குரு பெயர்ச்சி சிறப்பு யாக சாலை பூஜைகளும், அர்ச்சனைகளும் நடைபெற்றது. மேலும் தட்சினாமூர்த்தி சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. குரு பெயர்ச்சி பூஜை மற்றும் அர்ச்சனைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
Tags:    

Similar News