எம்எல்ஏக்கள் தலைமையில் குரு பூஜை விழா

கீழ்பூரிக்கல் கிராமத்தில் அப்பர் சுவாமிகளுக்கு 41 - ஆம் ஆண்டு குரு பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.

Update: 2024-05-04 03:32 GMT
தருமபுரி மாவட்டம், மற்றும் தர்மபுரி சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி வட்டம் கீழ்பூரிக்கல் கிராமத்தில் அமைந்துள்ள பெரியநாயகி உடனுறை அருள் தரும் திருக்கைலாசநாதர் திருக்கோயிலில் அப்பர் சுவாமிகளுக்கு 41 - ஆம் ஆண்டு குரு பூஜை விழாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர், மற்றும் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் இவர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதி மற்றும் பொதுமக்கள் பாமக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News