மூக்குப்பொடி சித்தரின் ஆண்டு விழா குருபூஜை; சாதுக்களுக்கு அன்னதானம்

திருவண்ணாமலையில் மூக்குப்பொடி சித்தர் 5ம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு ஏராளமான சாதுக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2023-12-14 12:35 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடிஅண்ணாமலை கோசாலையில் உள்ள ஸ்ரீலஸ்ரீ ராஜாயோகி மூக்குப்பொடி சித்தரின் 5ம் ஆண்டு குருபூஜை விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. குருபூஜை விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மற்றும் சாதுக்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. நடப்பதை முன்னதாகவே கணிக்கும் ஆற்றல் மிக்கவராக மூக்குப்பொடி சித்தர் விளங்கி வந்தார்.

எனவே பிரபலங்கள் அவரிடம் ஆசி பெறும் வகையில் புகழ் மிக்கவராக திகழ்ந்து வந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் மறைந்த மூக்குப்பொடி சித்தரின் உடல் கிரிவலப் பாதையில் உள்ள கோசாலை எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.அந்த இடம் தற்போது ஆசிரமமாக செயல்பட்டு வருகிறது. இன்று மூக்குப்பொடி சித்தரின் ஐந்தாம் ஆண்டு குருபூஜை விழா ஏராளமான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் முன்னிலையில் அன்னதானம் வஸ்திரம் தானம் வழங்கி மூக்குப்பொடி சித்தருக்கு தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தி குருபூஜை விழாவானது வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, திரைப்பட நடிகர் தாடி பாலாஜி, ஆஸ்ரமத்தின் பொறுப்பாளர் துரை உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் கலந்து கொண்டு ஸ்ரீலஸ்ரீ ராஜயோகி மூக்குப்பொடி சித்தரை வழிபட்டு அன்னதானம் மற்றும் வஸ்திரம் தானம் பெற்று சென்றனர்.

Tags:    

Similar News