பரமத்தி வேலூர் அருகே தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை: கடைகளுக்கு சீல்

பரமத்தி வேலூர் அருகே தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைத்தனர்.

Update: 2024-06-17 16:56 GMT

சீல் வைக்கப்பட்ட கடை

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மளிகை கடைகள் மற்றும் டீ கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் பரமத்திவேலுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் மற்றும் பரமத்திவேலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி ஆகியோர் பாண்டமங்கலதில் உள்ள சீனிவாசன் என்பவரது டீ கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த சீனிவாசன் டீ கடைக்கு சீல் வைத்து ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதே போல் பரமத்திவேலூரில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையில் உள்ள மளிகை கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதே மளிகை கடையில் ஏற்கெனவே குட்கா பொருட்கள் விற்பனை செய்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டும் மீண்டும் விற்பனை செய்ததால் உணவு பாதுகாப்பு அலுவலர் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்தனர்.

Tags:    

Similar News