குட்கா விற்றவர் கைது - 15 கிலோ குட்கா பறிமுதல்

பெரம்பலூரில் குட்கா விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 15 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-26 03:16 GMT

காவல் நிலையம் 

பெரம்பலூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா,பான்மசாலா போன்ற போதைப்பொருட்களையும், சட்டவிரோத மதுவிற்பனை ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட காவல்துறை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் வ.களத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் சிறப்பு ரோந்து மேற்கொண்ட போது, மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள நாகலட்சுமி மளிகை கடையின் உரிமையாளர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த புத்தர் தாஸ் மகன் தினேஷ் வயது -29 என்பவர், தனது மளிகை கடையில் சட்டவிரோதமாக குட்கா பான் மசாலா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து அவரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து 14 கிலோ எடையுள்ள ஹான்ஸ் மற்றும் 1 கிலோ எடையுள்ள விமல் பான் மசாலா என மொத்தம் 15 கிலோ எடையுள்ள சுமார் ரூ.6000 மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்த மங்களமேடு காவல் ஆய்வாளர் பாலாஜி மே-25ம் தேதி மாலை குற்றவாளியை, நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.

மேலும் இதுபோன்று மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, குட்கா, பான்மசாலா மற்றும் கள்ளச்சாராயம் விற்றல், காய்ச்சுதல், ஊறல் போடுதல் போன்ற செயல்களில் எவரேனும் ஈடுபட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம் எனவும் தகவலளிக்கும் நபர்களின் விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என மாவட்ட காவல்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News