சுக்காலியூர் அருகே குட்கா விற்றவர் கைது
சுக்காலியூர் அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், தாந்தோனிமலை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை நடப்பதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் தில்லைகரசிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மே 27ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில், சுக்காலியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியில் செயல்படும் சிவசக்தி பேக்கரியில், தடை செய்யப்பட்ட விமல் பாக்கு விற்பனை நடைபெறுவது கண்டறியப்பட்டது. இந்த விற்பனையில் ஈடுபட்ட, கரூர் மாவட்டம், பசுபதி பாளையம், ராமா கவுண்டனூர், 6-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் வயது 44 என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த ரூபாய் 2400 மதிப்புள்ள விமல் பாக்கு 8- பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்து, காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.