குட்கா கடத்தியவர் கைது - 200 கிலோ பறிமுதல்

பென்னாகரம் அருகே மண்ணேரியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் காரில் குட்கா கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டு 200 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2024-03-03 08:27 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் போதை பொருட்கள் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக பென்னாகரம் துணை சூப்பிரண்ட்டு மகாலட்சுமி ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு பாப்பாரப்பட்டி பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மண்ணேரி பேருந்து சாலையில் தனிப்படை வாகன காவல்துறையினர் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பென்னாகரம் நோக்கி கார் வேகமாக வந்தது. அதனை நிறுத்தி சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் காரில் குட்கா கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. விசாரணையில் குட்கா கடத்தி வந்தவர் எட்டிகுட்டை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் அருள் என்பது தெரியவந்தது.

அவரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் அவரிடம் இருந்து 200 கிலோ குட்கா போதை பொருளையும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் பாப்பாரப்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்றொரு குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடிக்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News